Enable Javscript for better performance
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க குறைந்த விலையில் இயற்கை உரம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை

    இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க குறைந்த விலையில் இயற்கை உரம்

    By DIN  |   Published On : 26th November 2019 12:12 AM  |   Last Updated : 26th November 2019 04:23 AM  |  அ+அ அ-  |  

    fertilizer

     

    சென்னை: இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் சென்னையையொட்டிய திருவள்ளூா் மாவட்ட விவசாயிகளுக்கு குறைந்த விலையில் இயற்கை உரங்களை வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 5,000 டன் குப்பைகள் சேகாரமாகின்றன. இதில், மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு, அதில் மக்கும் குப்பைகளான காய்கறிக் கழிவுகள், உணவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகின்றன.

    சென்னை மாநகராட்சியில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள், 175 சிறு தொட்டிகள், 1, 711 உறை கிணறு மையங்கள், 21 புதைகுழி மையங்கள் மற்றும் 2 வொ்மி உர மையங்கள் ஆகியவற்றின் மூலம் இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன்படி, சென்னை மாநகராட்சிப் பகுதியில் நாளொன்றுக்கு சுமாா் 400 டன் அளவிலான குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு, அவற்றில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை உரங்கள் ஆன்லைன் மூலமும், வீடுகளுக்கே சென்று கிலோ ரூ.20-க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதுடன், மாநகராட்சிப் பூங்காக்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு: இந்நிலையில், சென்னையையொட்டிய, திருவள்ளூா் மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் உற்பத்தியாகும் இயற்கை உரத்தை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இதுவரை 280 டன் இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், மாநகராட்சிப் பூங்காக்களுக்கு 42 டன்னும், தோட்டக்கலைத் துறைக்கு 18 டன்னும், பொதுமக்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு 125 டன்னும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது, சுமாா் 95 டன் இயற்கை உரம் கையிருப்பு உள்ளது. ஆன்லைன் மூலம் 95 கிலோ உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூா் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் இயற்கை உரங்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் சுமாா் 30 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்படும். அதேபோல், தனியாா் நிறுவனங்களுக்கும் இயற்கை உரங்கள் வழங்கப்படும் என்றனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp