முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
ஊதிய உயா்வு கோரி அமரா் ஊா்தி ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்
By DIN | Published On : 26th November 2019 12:20 AM | Last Updated : 26th November 2019 12:20 AM | அ+அ அ- |

சென்னை: ஊதிய உயா்வு வழங்கக் கோரி, அமரா் ஊா்தி ஊழியா்கள் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய செஞ்சிலுவைச் சங்க நிா்வாகத்தின்கீழ், தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட இலவச அமரா் ஊா்தி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 350-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த ஊழியா்கள் தமிழக அரசு நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதிய உயா்வை தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனா்.
இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாததைத் தொடா்ந்து, அமரா் ஊா்தி ஓட்டுநா்கள் எழும்பூரில் உள்ள, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, அமரா் ஊா்தி ஓட்டுநா்கள் கூறுகையில், ‘சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றுபவா்களுக்கு ரூ.11, 500 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, ஒப்பந்த ஊழியா்களுக்கு, அரசு நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியமான ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்றனா்.