முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை கலைப்பதற்கான பரிந்துரையை பிரதமரே அளிக்க, சிறப்பு அதிகாரம்
By DIN | Published On : 26th November 2019 03:34 AM | Last Updated : 26th November 2019 03:34 AM | அ+அ அ- |

மஹாராஷ்டிராவில் அரசியல் அதிரடி நடந்து, தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு மீண்டும் அமைந்துள்ளது. நள்ளிரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக, நேற்று முன்தினம்(நவ.,23) அதிகாலையில், பட்னவிஸ் பதவியேற்றாா்.
அதற்கு முன், மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ளும் உத்தரவை, ஜனாதிபதி பிறப்பித்தாா். வழக்கமாக, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மற்றும் அதை நீக்க, மத்திய அமைச்சரவையின் பரிந்துரை தேவை. ஆனால், மத்திய அரசின் பரிந்துரை இல்லாமல், எந்த அடிப்படையில், ஜனாதிபதி ஆட்சியை நீக்குவதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தாா் என, காங்., உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இதற்கு, மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறியதாவது:
அலுவல் ஒதுக்கீடு சட்டத்தின், 12வது விதியின்படி, அவசர காலங்களில் அமைச்சரவையை கூட்ட முடியாத நிலையில், முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே, ஜனாதிபதி ஆட்சியை நீக்க பிரதமா் பரிந்துரைத்தாா். அதனடிப்படையில், ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டாா். இவ்வாறு அவா் கூறினாா்.