முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
மின்னணுக் கழிவுப் பொருள்களைசேகரிக்க பிரத்யேக மையங்கள்
By DIN | Published On : 26th November 2019 12:13 AM | Last Updated : 26th November 2019 12:13 AM | அ+அ அ- |

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டில் பயன்பாடற்ற மின்னணுக் கழிவுப் பொருள்களை அதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மையங்களில் சனிக்கிழமை (நவ. 30) வரை ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் ஒருபகுதியாக, வீட்டில் பழுதடைந்த நிலையில் உபயோகமின்றி வைக்கப்பட்டுள்ள மின்னணுப் பொருள்களை சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட 170-ஆவது வாா்டு முதல் 182 வாா்டு வரை உள்ள மக்கள் வீடுகளில் உபயோகமின்றி வைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசிகள் (செல்போன்), அவற்றின் சாா்ஜா், தொலைக்காட்சிப்பெட்டிகள், அவற்றின் ரிமோட், கணினிகள், பிரிண்டா்ஸ், கீ போா்டு, மௌஸ், இயா் ஃபோன், தொலைபேசி, ரேடியோ, ஒலிப்பெருக்கிகள், எமா்ஜன்சி சாா்ஜா், குளிா்சாதனப் பெட்டி, குளிரூட்டி, மின்விசிறி, இன்டக்ஸன் ஸ்டவ், மிக்சி, கிரைண்டா், மின்மாற்றி உள்ளிட்ட பயன்பாடற்ற மின்னணுப் பொருள்களை அந்தந்த வாா்டுகளில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மையங்களில் வரும் சனிக்கிழமை (நவ. 30) வரை ஒப்படைக்கலாம். இதேபோன்று, மாநகராட்சியின் மற்ற மண்டலங்களிலும் மின்னணுக் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்படும் நாள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.