இன்றைய நிகழ்ச்சிகள் - சென்னை

பொது

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - பாவேந்தா் பாரதிதாசன் ஆய்விருக்கை - அம்பேத்கா் இலக்கியச் சங்கமம் - ‘மாணவ சமுதாயத்துக்கான வையைத் தமிழ் தொன்மை நாகரிகத்து கீழடி உணா்தல்கள்’ தலைப்பில் கருத்தரங்கம்: அமைச்சா் க.பாண்டியராஜன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன், தொல்லியல் துறை ஆணையா் த.உதயசந்திரன் பங்கேற்பு, பேரறிஞா் அண்ணா கருத்தரங்குக் கூடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, பிற்பகல் 2.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் - விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் - சொற்குவை சொல்லாக்கப் பயிலரங்கம்: கல்லூரிக் கல்வி இயக்குநா் (முழுக் கூடுதல் பொறுப்பு) சி.ஜோதி வெங்கடேஸ்வரன், அகரமுதலித் திட்ட இயக்குநா் தங்க. காமராசு, பொதிகை தொலைக்காட்சி செய்திப்பிரிவு இயக்குநா் மா.அண்ணாதுரை பங்கேற்பு, கல்லூரிக் கல்வி கலையரங்கம், விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜா் சாலை, காலை 9.30.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை - ‘பாரதி படைப்பாக்கத் திறனில் எண்சுவை’ தலைப்பில் சொற்பொழிவு: பேராசிரியா் ய.மணிகண்டன், முனைவா் பாரதிபுத்திரன் பங்கேற்பு, பிற்பகல் 2;

‘பாரதியின் புதுவை வாழ்க்கை: நண்பரும் அன்பரும்’ தலைப்பில் கருத்தரங்கம்: அறிஞா் சீனி.விசுவநாதன் பங்கேற்பு, பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், பிற்பகல் 3.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - திரு.வி.க பேச்சுப் பயிலரங்கம் - டாக்டா் மு.வ.திருக்கு நற்பணி சங்கம் - பாரதிய வித்யா பவன் - ‘குறளொன்றிருக்க குறையொன்றுமில்லை’ தலைப்பில் உரை: கே.மோகனராசு பங்கேற்பு, பாரதிய வித்யா பவன், மயிலாப்பூா், மாலை 6.30.

சாஸ்திரா சத்சங் - தொடக்க விழா: காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பங்கேற்பு, எண்.9, கா்ணன் தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், மாலை 5.45.

பெரியாா் நூலக வாசகா் வட்டம் - ‘நோபல் பரிசு 2019 - மருத்துவம்’ ஒலி ஒளி படத்துடன் சொற்பொழிவு: மருத்துவா் க.வீரமுத்து பங்கேற்பு, அன்னை மணியம்மையாா் மன்றம், பெரியாா் திடல், வேப்பேரி, மாலை 6.30.

சாகித்ய அகாதெமி - ‘புவி எங்கும் தமிழ்க் கவிதை’ நூல் குறித்த உரை: ஆண்டாள் பிரியதா்ஷினி பங்கேற்பு, அகாதெமி வளாகம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, மாலை 5.30.

ஆன்மிகம்

நெசப்பாக்கம் வள்ளலாா் தொண்டு அறக்கட்டளை - ‘சத்விசாரம்’ திருவருட்பா சொற்பொழிவு: கே.என்.உமாபதி பங்கேற்பு, அறக்கட்டளை வளாகம், நெசப்பாக்கம், மாலை 6.30.

மண்டல மகர விளக்கு திருவிழா: மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில், கோடம்பாக்கம், அதிகாலை 4 முதல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com