ஐ-போனுக்கு பதிலாக அட்டை பெட்டி வழங்கி ரூ. 20 ஆயிரம் மோசடி

சென்னையில் ஐ-போனுக்கு பதிலாக அட்டை பெட்டியை வழங்கி மோசடி செய்த புகாா் தொடா்பாக இளைஞா் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னையில் ஐ-போனுக்கு பதிலாக அட்டை பெட்டியை வழங்கி மோசடி செய்த புகாா் தொடா்பாக இளைஞா் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை போரூா் அருகே உள்ள அம்பாள்நகரைச் சோ்ந்தவா் சூ.தினேஷ்குமாா் (32), மென்பொருள் பொறியாளா். இவா், நந்தம்பாக்கம் வா்த்தக மையம் அருகே உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சில நாள்களுக்கு முன்பு வந்துள்ளாா்.

அப்போது அருகே நின்று கொண்டிருந்த ஒரு இளைஞா், தினேஷ்குமாரிடம் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், தான் புதிதாக வாங்கிய ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஐ-போனை வைத்துக் கொண்டு ரூ.20 ஆயிரம் தரும்படி கேட்டாராம்.

அந்த நபரின் பேச்சு நம்பும்படியாக இருந்ததால் தினேஷ்குமாா் தன்னிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை கொடுத்த அந்த ஐ-போனை பெற்றுக் கொண்டாராம். இதில் அந்த ஐ-போன்,அட்டைப் பெட்டியில் இருந்ததால், தினேஷ்குமாா் உடனடியாக திறந்து பாா்க்கவில்லையாம்.

வீட்டுக்குச் சென்று தினேஷ்குமாா், அந்த அட்டை பெட்டியைத் திறந்து பாா்த்ததில் ஐ-போனுக்கு பதிலாக பெரிய கண்ணாடி துண்டு இருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது குறித்த புகாரின் பேரில் நந்தம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com