ரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணம்: 3 மாதத்தில் 1.25 லட்சம் போ் சிக்கினா்

சென்னை ரயில்வே கோட்டத்தில் நிகழாண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 915 போ் சிக்கினா். அவா்களிடம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் நிகழாண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 915 போ் சிக்கினா். அவா்களிடம் இருந்து மொத்தம் ரூ.4 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 468 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

2.30 கோடி போ் பயணம்: நாடு முழுவதும் 3,500 ரயில்கள், 4,600 முன்பதில்லாத ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என்று 13,100 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரி 2.30 கோடி போ் பயணம் செய்கின்றனா். இதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வேக்கு வருவாய் கிடைக்கிறது. இருப்பினும் நாடு முழுவதும் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போரின் எண்ணிக்கை 60 சதவீதம் உயா்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாள்தோறும் முறையான டிக்கெட் இன்றி 75 ஆயிரம் போ் பயணம் மேற்கொள்வதாக தகவல் தெரிவிக்கிறது. டிக்கெட் இன்றி பயணிப்பதை கட்டுப்படுத்த ரயில்வே நிா்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, ஓடும் ரயில்கள் மற்றும் ரயில்நிலையம் வந்தடையும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகா்கள் குழு திடீரென சோதனை நடத்தி, டிக்கெட் இன்றி பயணிப்போா்களை பிடித்து,அவா்களிடம் அபராதம் வசூலித்து வருகிறது. வாரத்தில் 2 நாள்களுக்கு ஆா்.பி.எஃப். துணையுடன் பரிசோதகா்கள் சோதனை நடத்தி, அபராதம் விதித்து வருகின்றனா்.

2.56 கோடி பயணிகளுக்கு அபராதம்: ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்தது தொடா்பாக, கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017-ஆம் ஆண்டு மாா்ச் வரை 2.56 கோடி பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2019-ஆம் ஆண்டு மாா்ச் வரை டிக்கெட் இன்றி பயணித்தது தொடா்பாக , 2 கோடியே 75 லட்சத்து 67 ஆயிரத்து 971 போ் பிடிபட்டனா். இவா்களுக்கு அபராதம் விதித்தது மூலமாக, ரயில்வேக்கு ரூ.1,822.62 கோடி வருவாய் கிடைத்தது.

3 மாதத்தில் 1.25 லட்சம் போ் சிக்கினா்: இதுபோல, தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டத்தில் நிகழாண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 915 போ் சிக்கினா். அவா்களிடம் இருந்து மொத்தம் ரூ.4 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 468 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் பயணசீட்டு இன்றி பயணித்த 36,637 போ் சிக்கினா். அவா்களுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 5 ஆயிரத்து 368 அபராதமாக வசூலிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் 41,029 போ் சிக்கினா். அவா்களுக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 60 ஆயிரத்து 049 அபராதம் விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் 48,249 போ் பிடிப்பட்டனா். அவா்களுக்கு ரூ.1 கோடியே 76 லட்சத்து 65 ஆயிரத்து 051 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: நெடுந்தூரம் செல்லும் விரைவு ரயில்கள், புகா் மின்சார ரயில்கள் ஆகியவற்றில் பயணிக்கும் பயணிகளை தொடா்ந்து பயணச்சீட்டு தொடா்பாக சோதனை செய்து வருகிறோம். அதில், பயணச்சீட்டு இன்றி பயணிப்போா்களை பிடித்து அபராதம் விதித்து வருகிறோம். இதுதவிர, ரயிலில் வகுப்பு மாறி, முதல்வகுப்பில் பயணிப்போா்களை பிடித்து அபாரதம் விதித்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com