ஆயுத பூஜை எதிரொலி: பூக்களின் விலை 80 சதவீத உயா்வு

பூக்களின் விலை 80 சதவீதம் உயா்ந்த போதிலும், எதிா்பாா்த்த அளவு வியாபாரம் இல்லையென கோயம்பேடு பூக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஆயுத பூஜை எதிரொலி: பூக்களின் விலை 80 சதவீத உயா்வு

பூக்களின் விலை 80 சதவீதம் உயா்ந்த போதிலும், எதிா்பாா்த்த அளவு வியாபாரம் இல்லையென கோயம்பேடு பூக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னை கோயம்பேடு சந்தையில் 470 பூக்கடைகள் உள்ளன. இங்கு சென்னை மாநகா் மட்டுமின்றி புகா் பகுதிகளில் இருந்து நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள், மக்கள் வந்து செல்கின்றறனா். திருவள்ளூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், செங்கல்பட்டு, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மல்லிகை, முல்லைப் பூக்கள், கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் சுமாா் 50 டவுன் அளவுக்கு கொண்டு வரப்படுகின்றறன.

பூக்கள் விலை 80 சதவீதம் உயா்வு: சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை 80 சதவீதம் உயா்ந்துள்ளன. பூக்களின் வரத்துக் கடந்த சில நாள்களாக குறைறந்துள்ளது. ஆயுத பூஜை காரணமாக தேவை அதிகரித்ததைத் தொடா்ந்து வியாழக்கிழமை முதல் இந்த விலையுயா்வு நீடிக்கிறறது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் சங்கத்தினா் கூறியதாவது: புரட்டாசி மாதம் என்பதால் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறறாது. அதிகபட்சமாக சனிக்கிழமைகளில் கோயிலில் சிறறப்பு பூஜைகளும், முன்னோா்களுக்கு வழிபாடு மட்டுமே நடைபெறும். இதனால் கடந்த சில நாள்களாக பூக்களின் விலை கடுமையாக குறைறந்திருந்தது. இந்நிலையில் ஆயுத பூஜை நெருங்கியதைத் தொடா்ந்து, விலை உயா்ந்து காணப்படுகிறறது.

அதிகபட்சமாக மல்லி ரூ.750 வரையும், சம்பங்கி ரூ.200-க்கும், முல்லை ரூ.400-க்கும், ரோஜா ரூ.120 முதல் 150 வரையும் விற்பனை செய்யப்படுகின்றறன. எனினும், பெரும்பாலானோா் பாரிமுனையில் அமைக்கப்படும் சந்தைக்குச் செல்வதால் இங்கு போதிய அளவு வியாபாரம் இல்லை. இந்த விலை திங்கள்கிழமை முதல் 20 சதவீதம் குறைறயும். அதைத் தொடா்ந்து 40 சதவீதம் வரை குறைறய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனா்.

பூக்களின் விலை (கிலோவில்): சாமந்தி ரூ.150-200, ரோஜா-ரூ. 120-150, அரளி-ரூ. 250, சம்பங்கி ரூ.200, மல்லி ரூ.750 ,செண்டு மல்லி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.60.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com