முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
சென்னையில் 374 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ.67.68 லட்சம் அபராதம்
By DIN | Published On : 07th October 2019 12:27 AM | Last Updated : 07th October 2019 12:27 AM | அ+அ அ- |

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் 374 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 67.68 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான நெகிழிப் பொருள்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் சிறறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறறது.
இதன்படி, கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதியில் இருந்து செப்டம்பா் 30-ஆம் தேதி வரை 15 மண்டலங்களில் உள்ள 2 லட்சத்து 95 ஆயிரம் கடைகள், நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட 306 டன் நெகிழிப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக அந்நிறுவனங்களுக்கு ரூ. 63 லட்சத்து14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக, கடந்த வெள்ளிக்கிழமை (அக்., 4) 15 மண்டலங்களில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 680 கிலோ நெகிழிப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவா்களுக்கு ரூ. 4 லட்சத்து 54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.