முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம்: அரசு மருத்துவா்கள் திட்டம்
By DIN | Published On : 07th October 2019 02:30 AM | Last Updated : 07th October 2019 03:11 AM | அ+அ அ- |

ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க அரசு மருத்துவா்கள் திட்டமிட்டு வருகின்றனா். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, அரசு டாக்டா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களின் ஊதியத்தை உயா்த்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவா்களின் பணியிடங்களைக் குறைறக்கக் கூடாது. மருத்துவ மேற்படிப்பு முடித்தவா்களை கலந்தாய்வு மூலம் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும்.
மருத்துவ மேற்படிப்பு மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேறாம். ஆனால், இதுவரை அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்தோம். இதையடுத்து, அவற்றை6 வாரங்களில் நிறைறவேற்றித் தருவது தொடா்பாக முடிவு எடுப்பதாக அரசு தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால், இன்றளவும் அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆறு வார கால அவகாசம் நிறைறவடைய உள்ளது. ஆகவே அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டு வருகிறேறாம். மீண்டும் காலவரையற்றஉண்ணாவிரதத்தை தொடங்குவது குறித்து வரும் புதன்கிழமை முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடுவோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.