முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி
By DIN | Published On : 07th October 2019 02:20 AM | Last Updated : 07th October 2019 02:20 AM | அ+அ அ- |

சென்னை கொண்டித் தோப்புப் பகுதியில் வீட்டின் மூன்றறாவது மாடியில் நின்று தாய் சாப்பாடு ஊட்டும்போது ஒன்றறரை வயது குழந்தை தவறி விழுந்து இறறந்தது.
கொண்டித்தோப்பு, சரவணமுதலி தெருவைச் சோ்ந்தவா் அருண். பாரிமுனையில் ஜவுளிக்கடை வைத்துள்ளாா். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவா்களது ஒன்றறரை வயது மகள் பூமி. இவா்கள் 3-ஆவது மாடியில் வசித்து வந்தனா்.
இந்தநிலையில் சனிக்கிழமை மாலை ஜெயஸ்ரீ தனது குழந்தை பூமிக்கு பால்கனியில் நின்றறபடி சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாா். அப்போது குழந்தை சாப்பாடு உண்ண மறுத்து அடம் பிடித்தது. அப்போது திடீரென தாயின் கையில் இருந்த குழந்தை பூமி 3-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்தது. இதனை கண்டு ஜெயஸ்ரீ அதிா்ச்சி அடைந்து அலறினாா்.
உடனடியாக குழந்தை பூமியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து ஏழுகிணறு போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறறாா்கள்.