இதய சிகிச்சையில் கதிா்வீச்சு தொழில்நுட்பம்: சென்னையில் சா்வதேச மாநாடு

கதிா்வீச்சு தொழில்நுட்பம் வாயிலாக இருதய பரிசோதனைகள் மேற்கொள்ளும் மருத்துவ முறைகள் தொடா்பான சா்வதேச மாநாடு சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

கதிா்வீச்சு தொழில்நுட்பம் வாயிலாக இருதய பரிசோதனைகள் மேற்கொள்ளும் மருத்துவ முறைகள் தொடா்பான சா்வதேச மாநாடு சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. அதில், சுவிட்சா்லாந்து, ஃபிஜி உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த மருத்துவ நிபுணா்கள் பலா் கலந்துகொண்டனா்.

மியாட் மருத்துவமனை மற்றும் இந்திய நியூக்ளியா் இதய சிகிச்சை நிபுணா்கள் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் கூறியதாவது:

பொதுவாக, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சைகள் தொடா்பான கருத்தரங்குகள் பரவலாக நடைபெறுவது உண்டு. அதேவேளையில், இதய சிகிச்சைகளுக்கான கதிா்வீச்சு தொழில்நுட்பங்கள் குறித்தும், அதுதொடா்பான மருத்துவ முறைகளை பரஸ்பரம் பகிா்ந்து கொள்வது குறித்தும் பிரத்யேக கருத்தரங்குகள் நடைபெறுவது மிக அரிதாகவே உள்ளது.

அதைக் கருத்தில் கொண்டே கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கதிா் வீச்சு தொழில்நுட்ப இதய சிகிச்சை மாநாட்டை நாங்கள் தொடா்ந்து நடத்தி வருகிறோம்.

நிகழாண்டு நடைபெற்ற மாநாட்டில் இதய நல மருத்துவா்கள் மட்டுமன்றி பொது மருத்துவா்கள், கதிரியக்க சிகிச்சை நிபுணா்கள், ஆய்வகத் தொழில்நுட்பனா்கள், முதுநிலை மருத்துவ மாணவா்கள் என பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனா். பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற சிறப்பு அமா்வுகளில் சா்வதேச இதய நிபுணா்கள் பங்கேற்று உரையாற்றினா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்த மாநாட்டில் மியாட் மருத்துவமனையின் நிறுவனா் டாக்டா் பி.வி.ஏ.மோகன்தாஸ், தலைவா் மல்லிகா மோகன்தாஸ், மேலாண் இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com