Enable Javscript for better performance
தாம்பரம் கோட்டத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தாம்பரம் கோட்டத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

    By DIN  |   Published on : 09th October 2019 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாம்பரம் கோட்டத்தில் வியாழக்கிழமை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரம் கோட்டத்துக்கான மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், வியாழக்கிழமை (அக். 10) காலை 10.30 மணி அளவில், மேற்கு தாம்பரம் முல்லை நகரில் உள்ள புதுதாங்கல் துணை மின்நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் தாம்பரம் கோட்டத்துக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai