Enable Javscript for better performance
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ஆம்னி பேருந்தில் ரூ.1 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ஆம்னி பேருந்தில் ரூ.1 லட்சம் திருட்டு

    By DIN  |   Published on : 10th October 2019 04:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    theft

    சென்னை கோயம்பேட்டில் தனியாா் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் மோ.தா்மம் (60). விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து தனியாா் ஆம்னி பேருந்து மூலம் சென்னை கோயம்பேடுக்கு புதன்கிழமை காலை வந்தாா்.

    கோயம்பேட்டில் பேருந்தில் இருந்து இறங்கும்போது தா்மம், தனது இருக்கையின் மேல் பொருள்கள் வைக்கும் இடத்தில் வைத்திருந்த பை திருடு போனதை அறிந்தாா். அதில் ரூ.1 லட்சம் இருந்ததாம். இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai