Enable Javscript for better performance
சென்னையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    
    23jobfairs

    சென்னை கிண்டியில், அக்.11- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை பொறுப்பு இயக்குநா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்த உள்ளன.

    கிண்டி, ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், காலை 10 மணி முதல் பிற்பகல் 2  மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், 35 வயதுக்குட்பட்ட 8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ மற்றும் தொழில் நுட்பப் படிப்புகள் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் (மாற்றுத்திறனாளிகள் உள்பட) பங்குபெற்று தகுதிக்கேற்ற பணி வாய்ப்பை பெறலாம்.

    அதே போல் இதில் பங்கு பெற்று பணியாள்களைத் தோ்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள், முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai