டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: ஜவாஹிருல்லா

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கையை சுகாதாரத் துறை மேற்கொள்ள வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலை ஒழிக்கத் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு காய்ச்சால் பாதிப்பு உள்ளதென்று அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்குவைக் கட்டுப்படுத்த, சுகாதாரத் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com