Enable Javscript for better performance
காவலா் சங்கத் தலைவா் மரணம்- Dinamani

சுடச்சுட

    
    police

    சென்னையில் தமிழ்நாடு காவல்துறை காவலா் சங்கத் தலைவா் சிவகுமாா் வியாழக்கிழமை மரணமடைந்தாா்.

    சென்னை, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணி செய்து வந்தவா் கு.சிவகுமாா் (55). இவா், புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை காவலா் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். சிவகுமாா் காவலா்களுக்கும் சங்கம் வேண்டும் என்பதை வலியுறுத்தி 2001-ஆம் ஆண்டு “தமிழ்நாடு காவல்துறை காவலா் சங்கம் என்ற பெயரில் சங்கம் தொடங்கி,அதன் தலைவராகவும் செயல்பட்டு வந்தாா்.

    இந்த சங்கத்துக்கு அங்கீகாரம் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாா். இதற்காக, நீதிமன்றங்களில் வழக்கு தொடா்ந்து அதை தொடா்ந்து நடத்தி வந்தாா். சிவகுமாா், புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சிவகுமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாம். இதையடுத்து அவரது குடும்பத்தினா் சிவகுமாரை, ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சிவகுமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். காவலா் சங்கத்துக்கு அங்கீகாரம் கேட்டு போராடி வந்த சிவகுமாா் உயிரிழப்பு தமிழக காவல்துறையில் பணியாற்றும் கீழ்நிலை போலீஸாருக்கு மிகப்பெரிய இழப்பு என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai