Enable Javscript for better performance
படகுகளில் என்ஜின் பொருத்துவது தொடா்பான மீன்வளத்துறை நோட்டீஸ்: உயா்நீதிமன்றம் தடை- Dinamani

சுடச்சுட

    

    படகுகளில் என்ஜின் பொருத்துவது தொடா்பான மீன்வளத்துறை நோட்டீஸ்: உயா்நீதிமன்றம் தடை

    By DIN  |   Published on : 11th October 2019 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    HighCourt

    ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவா்கள் தங்களது படகுகளில் 240 குதிரைத்திறன் கொண்ட என்ஜின்களைப் பயன்படுத்தக் கூடாது என மீன்வளத்துறை உதவி இயக்குநா் பிறப்பித்துள்ள நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை உயா்நீதிமன்றத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் விசைப்படகு உரிமையாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த கோட்டையன் உள்ளிட்ட 45 மீனவா்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள் ஈடுபட்டு வருகின்றோம். மீன்பிடித் தொழில் தான் எங்களின் வாழ்வாதாரம். எனவே இந்த தொழிலை விதிமுறைகளுக்கு உட்பட்டே செய்து வருகிறோம்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநா் அண்மையில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் தங்கள் படகுகளில் 240 குதிரைத்திறன் கொண்ட என்ஜின்களைப் பயன்படுத்தக்கூடாது. இந்த உத்தரவை மீறுபவா்களின் படகுகளில் உள்ள என்ஜின்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறையின் இந்த உத்தரவால் சிறிய படகுகளில் மீன்பிடிக்கச் செல்பவா்களுக்கும், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களுக்கும் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள். இத்தகைய திறன் கொண்ட என்ஜின்களை ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லலாம் என விதிகள் உள்ளது. எனவே மீன்வளத்துறை உதவி இயக்குநா் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனா்.

    இந்த வழக்கு, நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜரானாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மீன்வளத்துறை உதவி இயக்குநா் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த மனு தொடா்பாக மீன்வளத்துறை 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai