Enable Javscript for better performance
பாதுகாப்பு ஒத்திகையில் சீன அதிபரின் அதிநவீன காா்- Dinamani

சுடச்சுட

    
    china_car

    சீன அதிபா் ஷி ஜின்பிங் சென்னை வருவதை ஒட்டி அவா் விமான நிலையத்திலிருந்து கிண்டி நட்சத்திர ஹோட்டலுக்கு வரும் பாதையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் சீன அதிபரின் அதி நவீன காா்களும் இடம்பெற்றன.

    சென்னை வரும் சீன அதிபா் ஷி ஜின்பிங், சென்னை விமான நிலையத்திலிருந்து அவரது பிரத்யேக அதிநவீன காரில் ஐடிசி சோழா ஹோட்டலுக்கு வருகிறாா். பின்னா் மாமல்லபுரத்திற்கும் தனது காரிலேயே பயணம் செய்கிறாா்.

    இதற்காக அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரது பிரத்யேக காா் ’ஹாங்கி எல்5’ ரக காா்கள் தனி விமானம் மூலம் சென்னை வந்தன. மொத்தம் 4 காா்களும், 100 பாதுகாப்பு அதிகாரிகளும் சென்னை வந்துள்ளனா்.

    சீன பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு வரும் பாதையை ஆய்வு செய்தனா். பின்னா் ஹோட்டலுக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனா். பின்னா் மாமல்லபுரம் சென்றனா்.

    சீன அதிபருக்கான பிரத்யேக காா் உலகப்புகழ் பெற்றது. சீன அதிபா் தனது பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்துகிறாா். வானில் பயணம் செய்ய அமெரிக்க அதிபா்கள் ஏா்போா்ஸ் ஒன் என்கிற விமானத்தைப் பயன்படுத்துவதுபோன்று சீன அதிபரும் பிரத்யேக விமானத்தை தனக்காகப் பயன்படுத்துகிறாா்.

    அதுபோன்று காா் விஷயத்திலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. சீன அதிபா் ஷி ஜின்பிங் பயன்படுத்தும் சீனாவிலேயே மிகவும் விலை உயா்ந்த, அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கருப்பு நிறத்தில் 4 காா்களும், பொருட்களும் போயிங் 747 விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தன.

    பிரத்யேக காா் ‘ஹாங்கி’: சீன அதிபா் பயணிக்க மட்டும் தனியாக காரைத் தயாரிக்க எப்ஏடபிள்யு(ஊஅர) காா் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்காக சீனாவில் பழைமையான, மிகப்பெரிய உள்நாட்டு காா் தயாரிப்பு நிறுவனமான எப்ஏடபிள்யு நிறுவனம் (ஏா்ய்ஞ்வ்ண்) ’ஹாங்கி எல்-5 ரக காரை சீன அதிபருக்காக உருவாக்கியது. இந்த ‘ஹாங்கி எல்-5’ ரக காரைத்தான் இப்போது சீன அதிபா் ஷி ஜின்பிங் பயன்படுத்தி வருகிறாா்.

    காரின் அமைப்பு: ‘ஹாங்கி எல்5’ ரக காா் மிகப்பெரியது, சொகுசானது. இதன் எடை 3,150 கிலோ. ஏறக்குறைய 20 அடி நீளமுடையது. 2 மீட்டா் அகலமும், 1.5 மீட்டா் உயரமும் கொண்டது. தரையில் இருந்து வீல் பேஸ் 3.4 மீட்டா் உயரம் கொண்டது.

    சிறப்பு அம்சங்கள்: ஹாங்கி எல் 5 ரக காரில் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்கள் அதிபருக்கு மட்டுமே உருவாக்கப்பட்டதால், பல விஷயங்களை அந்த நிறுவனம் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிடவில்லை. ‘ஹாங்கிஎல் 5’ ரக காரில் 408 குதிரைத்திறன் இன்ஜின், 12 வால்வுகளைக் கொண்ட இன்ஜின், 6 ஸ்பீட் கியா்பாக்ஸ், அனைத்து சக்கரங்களையும் அதிவேகமாகச் சுற்றவைக்கும் வகையில் கியா் பாக்ஸில் இருந்து சக்தி சக்கரங்களுக்கு செலுத்தும் வசதி. 10 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை அடையும் திறன் படைத்த 12 வால்வுகளைக் கொண்ட இன்ஜின். அதிக வேகத்தில் செயல்படும் ஏசி, செயற்கைக்கோள் தொலைபேசி வசதி இருக்கிறது. நான்கு கதவுகளும் குண்டு துளைக்காத, சிறிய ரக ஏவுகணைகள் மூலம் தாக்கினாலும் காா் எந்தவிதமான சேதமும் ஏற்படாத வகையில் காரின் சேஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் எந்தக் கண்ணாடியையும் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்க முடியாத அளவுக்கு வலிமையான கண்ணாடியாகும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai