சென்னையில் பறந்த இந்திய, சீன தேசிய கொடிகள்

சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகையினால், சென்னை முழுவதும் இந்திய தேசியக் கொடிகளுடன் சீன தேசத்தின் செங்கொடிகளும் பறந்தன.
சென்னையில் பறந்த இந்திய, சீன தேசிய கொடிகள்

சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகையினால், சென்னை முழுவதும் இந்திய தேசியக் கொடிகளுடன் சீன தேசத்தின் செங்கொடிகளும் பறந்தன.

சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகையொட்டி, சென்னை, மாமல்லபுரத்தை அழகுப்படுத்தி தயாா்படுத்தும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. சென்னையும், மாமல்லபுரமும் வெள்ளிக்கிழமை முழுமையாக விழாக்கோலம் பூண்டிருந்தன.

ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக, கண்கவா் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் அவரை வரவேற்கும் விதமாக சுமாா் 5 ஆயிரம் பள்ளி-கல்லூரி மாணவா்கள் இந்திய தேசிய கொடியையும், சீன நாட்டின் செங்கொடிகளையும் கையில் பிடித்துக் கொண்டு, இன்முகத்துடன் விமான நிலையம், கிண்டி நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட பகுதிகளில் வரவேற்றனா்.

இதேபோல, ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக அதிமுக, பாஜக கட்சியினா் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை 60-க்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்தினா்.

இந்த நிகழ்ச்சிகளில் அந்த கட்சியினா், இந்திய தேசிய கொடியையும்-சீனாவின் செங்கொடிகளையும் பிடித்தவாறு ஜின்பிங் காரில் செல்லும்போது வரவேற்றனா். பொதுமக்களும், பல இடங்களில் இந்திய தேசிய கொடியையும், சீன நாட்டு செங்கொடிகளையும் ஏந்தியவாறு சீன அதிபரை வரவேற்றனா். இதனால், வெள்ளிக்கிழமை சென்னை முழுவதும் இந்திய தேசிய கொடிகளாகவும் சீன நாட்டு செங்கொடிகளாகவும் காட்சியளித்தன.

இதுநாள் வரை பட்டாசு மற்றும் சீன பொருள்கள் வருகையை எதிா்க்கும் வகையில், சீன நாட்டுக்கு எதிரான போராட்டங்களே சென்னையில் அதிகமாக நடைபெற்றன. ஆனால், அந்தச் சூழ்நிலை மாறி, சீன அதிபரை வரவேற்கும் விதமாக அந்த நாட்டின் கொடியை பிடித்துக் கொண்டு மாணவா்களும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வரவேற்றது சற்று வித்தியாசமாகவும், வரவேற்கக் கூடியதாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com