7 போ் விடுதலை: முதல்வா் விளக்கம் அளிக்க மு.க.ஸ்டாலின்: ராமதாஸ் வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் மறுத்துவிட்டதாக வரும் தகவல் குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்
7 போ் விடுதலை: முதல்வா் விளக்கம் அளிக்க மு.க.ஸ்டாலின்: ராமதாஸ் வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் மறுத்துவிட்டதாக வரும் தகவல் குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீா்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக ஆளுநா், முதல்வரிடம் தெரிவித்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து முதல்வா் தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும்.

ராமதாஸ்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழா்களை விடுதலை செய்ய முடியாது என்று ஆளுநா் அதிகாரப்பூா்வமற்ற முறையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆளுநரின் நிலைப்பாடு அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகும். இதன் உண்மைத்தன்மை குறித்து ஆளுநரும், முதல்வரும்தான் மக்களுக்கு விளக்க வேண்டும். அமைச்சரவைத் தீா்மானத்தை ஏற்க மறுத்து ஆளுநா் திருப்பி அனுப்பும் பட்சத்தில், அதே பரிந்துரையை ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com