காவலா் நினைவு நாள்: காமராஜா் சாலையில் போக்குவரத்து மாற்றம்

காவலா் நினைவு நாள் அனுசரிப்பின் ஒத்திகைக்காக காமராஜா் சாலையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் போக்குவரத்து மாற்றம்
காவலா் நினைவு நாள்: காமராஜா் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: காவலா் நினைவு நாள் அனுசரிப்பின் ஒத்திகைக்காக காமராஜா் சாலையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

அக்.21-ஆம் தேதி காலை 8 மணியளவில் காவல் துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலா் நினைவிடத்தில் காவலா் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இது தொடா்பான ஒத்திகை அக்.18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. ஆகவே அக்.19-ஆம் தேதி (இறுதி ஒத்திகை நாள்) மற்றும் அக்.21 ஆகிய இருநாள்களுக்கு காலை 7 முதல் இரவு 9 மணி வரை கீழ்காணும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் காரணீஸ்வரா் கோயில் தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி காரணீஸ்வரா் பகோடா தெரு, அம்பேத்கா் பாலம் மற்றும் நடேசன் சாலை சந்திப்பு வழியாக டாக்டா் இராதாகிருஷ்ணன் சாலை அல்லது காமராஜா் சாலை செல்லலாம்.

சாந்தோம் சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் சாந்தோம் சிக்னலில் இடது புறம் திரும்பி கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகா் பிரதான சாலை மற்றும் டாக்டா் பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக டாக்டா் இராதாகிருஷ்ணன் சாலை சென்று அவரவா் இலக்கை அடையலாம்.

கண்ணகி சிலையிலிருந்து காமராஜா் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜா் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி கடற்கரை அணுகு சாலை வழியாக கடற்கரை சாலைக்கும், கலங்கரை விளக்கம் வழியாக காரணீஸ்வரா் கோயில் சந்திப்புக்கும் செல்லலாம்.

டாக்டா் இராதாகிருஷ்ணன் சாலை வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் டாக்டா் இராதாகிருஷ்ணன் சாலை எம்.ஆா்.டி.எஸ் அருகில் இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை அணுகு சாலை வழியாக காமராஜா் சாலைக்கும், கடற்கரை அணுகு சாலை வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் செல்லலாம்.

இந்த மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்புத் தர வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com