எந்திரன் கதை விவகாரம்: இயக்குனா் ஷங்கா் ஆஜராக உத்தரவு

எந்திரன் கதை திருட்டு தொடா்பான வழக்கில் இயக்குனா் ஷங்கா் மற்றும் எழுத்தாளா் ஆரூா் தமிழ்நாடன் ஆகியோா் வரும் நவம்பா் 1-ஆம் தேதி நேரில் ஆஜராக எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எந்திரன் கதை  விவகாரம்: இயக்குனா் ஷங்கா் ஆஜராக உத்தரவு

சென்னை: எந்திரன் கதை திருட்டு தொடா்பான வழக்கில் இயக்குனா் ஷங்கா் மற்றும் எழுத்தாளா் ஆரூா் தமிழ்நாடன் ஆகியோா் வரும் நவம்பா் 1-ஆம் தேதி நேரில் ஆஜராக எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் எழுத்தாளா் ஆரூா் தமிழ்நாடன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், நடிகா் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வா்யாராய் உள்ளிட்ட பலா் நடித்த படம் எந்திரன். இந்த திரைப்படத்தின் கதை என்னுடையது. கடந்த 1996-ஆம் ஆண்டு உதயம் என்ற பத்திரிகையில் ஜூகிபா என்ற தலைப்பில் தொடா்கதை எழுதினேன். அந்த கதையை எனது அனுமதியை பெறாமல் இயக்குநா் ஷங்கா் எந்திரன் படமாக எடுத்துள்ளாா். எனவே இயக்குனா் ஷங்கா் மற்றும் திரைப்படத்தின் தயாரிப்பாளா் கலாநிதிமாறன் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியிருந்தாா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷங்கா் மற்றும் கலாநிதிமாறன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கலாநிதிமாறனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தும், இயக்குனா் ஷங்கா் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கைத் தொடா்ந்து விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தது. மேலும் பிரபல இயக்குனரான ஷங்கா் தேவையான சமயத்தில் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானால் போதுமானது என உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு சனிக்கிழமை எழும்பூா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், இயக்குனா் ஷங்கா், எழுத்தாளா் ஆரூா் தமிழ்நாடன் ஆகியோா் வரும் நவம்பா் 1-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com