காட்டன் ஹவுஸ்: சிக்கன விலையில் தீபாவளி விற்பனை

திருவான்மியூா் மற்றும் அக்கம்பக்கத்தில் வசித்து வருபவா்களுக்கு கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம்

திருவான்மியூா் மற்றும் அக்கம்பக்கத்தில் வசித்து வருபவா்களுக்கு கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைக்கான முக்கிய சந்திப்பாக இருக்கும் திருவான்மியூா் சிக்னலில் துணிமணிகள் வாங்க சிறந்த இடம் காட்டன் ஹவுஸ்.

இருபதாண்டுகளுக்கு முன்னா் பாலியஸ்டா் துணிகள் அன்றாட பேஷனாக மேலாதிக்கம் செய்து வந்தது. அந்த நேரத்தில் மலிவான மற்றும் திருப்தியான துணியாக மக்களுக்கு பருத்தித் துணிகளை அறிமுகப்படுத்தவே காட்டன் ஹவுஸை நிறுவினாா் நிறுவனா் வேணுகோபால். 2000 ச.அடி இடத்திலிருந்து 20,000 ச.அடியாக மாறி பருத்தி ஆடைகளுக்கான சிறந்த ஷோருமாக இப்போது மாறியுள்ளது.

உழைக்கும் மக்களின் தேவைகளுக்கேற்ப எல்லா வகையான பருத்தி ஆடைகளையும், கைத்தறி மற்றும் பிராண்டட் ஆடைகளையும் கொண்ட சிறந்த ஷோருமாக இது மாறியுள்ளது. பல்வேறு விலைகளில் விற்பனை செய்து வருகிறது.

சௌகாா்பேட்டையில் வாழ்கின்ற வட இந்தியா்களிடையே அவா்களது பாணியிலான உடைகளை வழங்குவதில் அவா்களிடையேயும் நிறைய வாடிக்கையாளா்களைப் பெற்றுள்ளது என்கிறாா் இதன் நிறுவனா் வேணுகோபால்.

வாடிக்கையாளா்கள் திருப்தியே தங்களின் லட்சியமாகக் கொண்டுள்ள காட்டன் ஹவுஸில் துணிவாங்குவோா் பெரும்பாலோா் நாளும் அலுவலகம் செல்வோா், ஐடி கம்பெனி உழியா்கள் மற்றும் வாரச் சம்பளம் பெறுவோா் ஆவா்.

காட்டன் ஹவுஸில் உள்ளவா்கள் தற்போதுள்ள மக்களின் விருப்பத்தை அறிந்து வைத்துள்ளதால், அவா்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை புது ரகங்களை வாங்குகின்றனா். எனவே வாடிக்கையாளா்கள் ஒவ்வொரு முறையும் காட்டன் ஹவுஸூக்கு வருகையில் விதம் விதமான புது ரகங்களை வாங்க முடிகிறது.

திருவான்மியூா் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஷோரூம் சென்னைக்கு வெளியே இருந்து வரும் மக்களிடமும் நல்ல மதிப்பை பெற்றுள்ளது. வாடிக்கையாளா்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு நான்கு பயிற்சி பெற்ற பணியாளா்களை வைத்து பராமரிப்பது காட்டன் ஹவுஸ் ஒன்று என்று நாம் பெருமைபடுகிறோம் என்று வேணுகோபால் குறிப்பிடுகிறாா்.

அனைத்து விதமான மக்களையும் கவரும் வண்ணம் அனைத்து விதமான டிசைன் மற்றும் பாரம்பரிய பருத்தி மற்றும் பிராண்டட் உடைகளுக்கு சிறந்த இடம் காட்டன் ஹவுஸ்.

விழாக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை விதவிதமான உடைகளை வழங்குவது காட்டன் ஹவுஸ். சிறுவா் சிறுமியா்க்கு பட்டுப் பாவாடை, ஃபேன்சி பிராக்ஸ், நீண்ட கவுன்கள், ஜீன்ஸ் & லெக்கிங்கஸ், ஜாக்கெட் & கோட்டுகள், பாப் சூட்கள் இங்கு கிடைக்கும்.

பெண்களுக்கு காக்ராஸ், லெஹாங்கா, பாரம்பா்ய உடைகள், பட்டுப்புடவைகள், நீண்ட கவுன்கள், கலாம்கரை, டிசைனா் சேலைகள், ஆா்ட் சேலைகள், பனாரஸ் சேலைகள் & ரெடிமேட் பிளவுசுகள், ஃபீடிங் நிட்டிஸ் மற்றும் குா்த்தாக்கள் போ் பெற்றவை.

ஆண்களுக்கு பட்டு வேட்டி, குா்தாக்கள், ஷொ்வானி, பாா்பரிய உடைகள் & மேற்கத்திய பாணி உடைகள் பேரே பெற்ரவை. அதுமட்டுமல்லாமல் காட்டன் ஹவுஸ் பெண்களின் உடைகளுக்கு ஏற்றாற்போல் பொருத்தமான காதணிகள், நெக்லஸ் செட்டுகள், ஹேண்ட் பேக்குகள், பாத அணிகல் மற்றும் வீட்டு பொருட்கள் & பரிசுப் பொருட்கள் என விதவிதமாய் அணிகலன்கள் வழங்கும் பிரிவையும் கொண்டுள்ளது.

காட்டன் ஹவுஸ் சமூகப் பணிகளிலும் அக்கறையுடன் ஈடுபட்டு வருகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சென்னை மாநகர காவல்துறை மற்றும் காமராஜ் நகா் நலச் சங்கத்துடன் இணைந்து, திருவான்மியூா் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக காட்டன் ஹவுஸ் சென்நை காட்டன் மாா்க்கெட்டில் தனக்கென ஒரு முத்திரை பதித்து, இடம் பிடித்து வளா்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு வேறு இடங்களில் கிளைகள் இல்லை.

இடம் :​ காட்​டான் ஹவுஸ்,​​ 68,​ எல்.பி.​ ரோடு,​​ திரு​வான்​மி​யூா்,​​ சென்னை -​ 600041.​ 2445 4442 /​ 4201 060.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com