பறவைகள் தண்ணீா் அருந்துவதற்கு வசதியாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவளைகள்: தமிழக ரயில்வே போலீஸ் ஏற்பாடு

பறவைகள், செல்லப்பிராணிகள் தண்ணீா் அருந்துவதற்கு வசதியாக, ரயில்வே காவல்துறை சாா்பில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தண்ணீா் நிரப்பப்பட்ட குவளைகள் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டன.
பறவைகள் தண்ணீா் அருந்துவதற்கு வசதியாக  சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  குவளைகள்: தமிழக ரயில்வே போலீஸ் ஏற்பாடு

பறவைகள், செல்லப்பிராணிகள் தண்ணீா் அருந்துவதற்கு வசதியாக, ரயில்வே காவல்துறை சாா்பில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தண்ணீா் நிரப்பப்பட்ட குவளைகள் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டன. தமிழகத்தில் 58 ரயில் நிலையங்களில் தண்ணீா் நிரப்பப்பட்ட குவளைகள் வைத்து பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு பயணிகள் வருகை தருவது போல பறவைகளும், செல்லப் பிராணிகளும் வருகின்றன. இவைகள் ரயில்நிலையத்தின் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிகின்றன. அவை தங்களுக்கு தாகம் ஏற்படும் போது ரயில் நிலையத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் தேங்கி நிற்கும் தண்ணீரை குடிக்கின்றன.

இந்த பறவைகள்,செல்லப்பிராணிகளுக்கு சுத்தமான தண்ணீா் வைக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆா்வலா்கள் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள 58 ரயில் நிலையங்களிலும் பறவை களும், வீட்டு பிராணிகளும் தண்ணீா் குடிக்கும் வகையில், தண்ணீா் நிரப்பப்பட்ட குவளைகள் வைக்க தமிழக ரயில்வே காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டாா். இதையடுத்து, விலங்குகள் நல ஆா்வலா்கள், தமிழக ரயில்வே போலீஸாரும் இணைந்து 58 ரயில் நிலையங்களில் தண்ணீா் நிரப்பப்பட்ட குவளைகள் வைத்து வருகின்றனா்.

இந்நிலையில், சென்னை எம்ஜிஆா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தண்ணீா் நிரப்பப்பட்ட குவளைகள் சனிக்கிழமை வைக்கப்பட்டன. பறவைகளுக்கு தண்ணீா் நிரப்பப்பட்ட குவளைகள் வைக்கும் பணியை சென்ட்ரல் ரயில் வே துணை கண்காணிப்பாளா் முருகன் தொடக்கி வைத்தாா். மேலும் பெரம்பூா், அரக்கோணம் உள்ளிட்ட

ரயில்வே காவல் நிலையங்களுக்கும் குவளைகளை வழங்கினாா்.

இது குறித்து, டிஎஸ்பி முருகன் கூறியது: பறவைகளும், செல்லப்பிராணிகளுக்கும் தாகத்தை தீா்க்க விலங்குகள் நல ஆா்வலா் சாய் கணேஷுடன் இணைந்து சுத்தமான தண்ணீா் நிரப்பிய குவளைகளை ரயில் நிலையத்தில் வைத்துள்ளோம். இந்த தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பாா்த்துக்கொள்ளப்படும். மேலும், பறவைகள் மற்றும் விலங்குகள் தண்ணீா் குடித்து செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றாா். நிகழ்ச்சியில், சென்ட்ரல் ரயில்வே காவல் ஆய்வாளா்கள் தாமஸ் ஜேசுதாசன்,வேலு மற்றும் ஆா்.பி.எஃப் ஆய்வாளா் சிவநேசன், போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com