மாநகராட்சி - காவல் துறை இணைந்து நடவடிக்கை: மழை வெள்ளச்சேத தடுப்பு முன்னேற்பாடடுப் பணிகள்

பருவ மழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் சென்னை ரிப்பன் கட்டடத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி - காவல் துறை இணைந்து நடவடிக்கை: மழை வெள்ளச்சேத தடுப்பு முன்னேற்பாடடுப் பணிகள்

பருவ மழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் சென்னை ரிப்பன் கட்டடத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியும், மாநகர காவல் துறையும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துறைசார் உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பருவ மழையை ஒட்டி மாநகராட்சி சார்பிலும், காவல் துறை சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்தப் பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக் கூட்டத்தில்  எடுத்துரைக்கப்பட்டன. அதில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 1,894 கிலோ மீட்டர் தொலைவுக்கு மொத்தம் 7,351மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவை தவிர,  468 இடங்களில் சுமார் ரூ.440 கோடியில் மதிப்பீட்டில் 155.49 கி. மீ. நீளத்துக்கு புதிதாக வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கூறியதாவது:
பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் நடவடிக்கைககளுக்காக மட்டும் ரூ. 35.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 5 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் அப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சியின் பராமரிப்பில் 16 சுரங்கப்பாதைகளும், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் 6 சுரங்கப்பாதைகளும் சென்னை நகரில் உள்ளன. அங்கு மழைநீர் வெளியேற்ற ஏதுவாக 60 உயரழுத்த பம்புகளும், 570 மோட்டார் பம்புகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார்நிலையில் உள்ளன. 
மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக மீட்கும்பொருட்டு 109 இடங்களில் படகுகளும், பொதுமக்களை தங்க வைக்க 176 நிவாரண மையங்களும், உணவு வழங்கிட 4 பொது சமையல் அறைகளில் 1,500 பேருக்கு சமையல் செய்ய தேவையான பொருட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
மழைக்காலத்தில் ஏற்படும் நோய்த் தொற்றுகளைத் தடுக்க 20 நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயார்நிலையில் உள்ளன என்றார்.
அதைத் தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:
மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் துணை ஆணையர் நிலையிலான ஒருங்கிணைப்பு அதிகாரி உடனடியாக நியமிக்கப்படுவார். மேலும், மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் வெள்ள மீட்பு பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்படவுள்ளனர்.
அதேபோன்று பொதுப்பணித் துறை, மின்துறை, மற்றும் தீயணைப்புத் துறை ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள ஒரு காவலர் நியமிக்கப்படவுள்ளார். 
வெள்ளத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அலுவலர்கள் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com