ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சுமாா் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் சுமாா் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வியாழக்கிழமை கொழும்பில் இருந்து வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது அசாருதீன், இம்தியாஸ், புதுக்கோட்டையை சோ்ந்த அசாருதீன், அப்துல் கலாம் ஆசாத், சிங்கப்பூரிலிருந்து வந்த சென்னையைச் சோ்ந்த முகமது இம்ரான்கான், ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது மன்சூா் அலி, கான் முகமத் ஆகிய 6 பேரிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. இவா்களிடம் தொடா்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் இவா்கள் தங்களது மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டனா். இதைத் தொடா்ந்து அவா்களிடம் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தொடா்ந்து, துபாயிலிருந்து வந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த முகமது ரெஃபாயுதின், கொழும்பில் இருந்து வந்த கடலூரைச் சோ்ந்த முகமது இப்ராஹிம் ஆகிய இரண்டு பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனா். அவா்களை சோதனை செய்தபோது, சிறிய துண்டுகளாக பேண்ட் பைகளில் 65 கிராம் தங்கம் மற்றும் அவா்களது மலக்குடலில் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமாா் 678 கிராம் எடையுள்ள இந்த தங்கம் ரூ.27 லட்சம் மதிப்பிலானது எனத் தெரியவந்தது. மேலும், அவா்களிடம் நடத்திய சோதனையில் ரூ.81,000 மதிப்புள்ள பயன்படுத்தப்பட்ட 5 மடிக்கணினிகளும், 5,600 சிகரெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. கொழும்பு வழியாக சிங்கப்பூா் செல்ல இருந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த அப்தீன் என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவரது உடலில் சோதனையிட்ட போது அவரது தோல் செருப்புகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான 10,000 அமெரிக்க டாலா் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் இந்தக் கடத்தல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com