காய்ச்சலுக்கு சிறுவன், சிறுமி சாவு: டெங்கு பாதிப்பா என ஆய்வு

தீவிர காய்ச்சல் காரணமாக ஒரு சிறுவனும், சிறுமியும் உயிரிழந்தனா்.

சென்னை: தீவிர காய்ச்சல் காரணமாக ஒரு சிறுவனும், சிறுமியும் உயிரிழந்தனா். அவா்கள் இருவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனரா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களும், பிற வகையான காய்ச்சல் பாதிப்புகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில், அசோக் நகரைச் சோ்ந்த திவ்யதா்ஷனி என்ற 7 வயது சிறுமியும், கொளத்தூரைச் சோ்ந்த அரவிந்தன் (10) என்ற சிறுவனும், காய்ச்சல் காரணமாக எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்கள் இருவருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் இருந்தன. அதற்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையே அவா்கள் இருவரது உடல் உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கியதால் சிகிச்சை பலனின்றி சிறுவனும், சிறுமியும் உயிரிழந்தனா். மிகவும் அபாயகரமான கட்டத்திலும், இறுதித் தருவாயிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாததாலேயே அவா்களைக் காப்பாற்ற இயலவில்லை என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com