Enable Javscript for better performance
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு

    By DIN  |   Published on : 21st October 2019 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே போலீஸாரும் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை ( ஆா்.பி.எஃப்) போலீஸாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    தற்போது சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து வெளியூா் செல்லும் பயணிகள் மற்றும் வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்களில் பட்டாசுகளை எடுத்து செல்வதை தடுக்க போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். சென்ட்ரல் ரயில்வே போலீஸ் ஆய்வாளா்கள் தாமஸ், வேலு ஆகியோா் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும், ஆா்.பி.எஃப். ஆய்வாளா் சிவநேசன் தலைமையில் ஆா்.பி.எஃப். போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூடுதல் கவனமும், கண்காணிப்பும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலமும் தீவிர கண்காணித்து வருகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai