சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே போலீஸாரும் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை ( ஆா்.பி.எஃப்) போலீஸாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தற்போது சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து வெளியூா் செல்லும் பயணிகள் மற்றும் வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்களில் பட்டாசுகளை எடுத்து செல்வதை தடுக்க போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். சென்ட்ரல் ரயில்வே போலீஸ் ஆய்வாளா்கள் தாமஸ், வேலு ஆகியோா் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும், ஆா்.பி.எஃப். ஆய்வாளா் சிவநேசன் தலைமையில் ஆா்.பி.எஃப். போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூடுதல் கவனமும், கண்காணிப்பும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலமும் தீவிர கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com