சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 5.2 மெகாவாட் சூரிய ஒளி மின்உற்பத்தி

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில், இதுவரை மொத்தம் 5.2 மெகாவாட் அளவுக்கு சூரியஒளி மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில்  5.2 மெகாவாட் சூரிய ஒளி மின்உற்பத்தி

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில், இதுவரை மொத்தம் 5.2 மெகாவாட் அளவுக்கு சூரியஒளி மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

காா்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல், பசுமையைக் காத்தல், பாதுகாப்பான மின் ஆற்றலைப் பெறுதல் உள்ளிட்ட நோக்கத்துக்காக சூரிய மின்சக்தி திட்டத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் ஊக்கம் அளித்து வருகிறது. அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சூரிய ஒளி மின் சாதனங்களை நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், திட்டப்பணிகளை நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரைகள் உள்பட பல்வேறு இடங்களில் சூரியஒளி மின்தகடுகள் நிறுவப்பட்டு வருகின்றன.

இதேபோல், கோயம்பேடு மெட்ரோ பணிமனையிலும் சூரியஒளி மின்சாதன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதோடு, மின்சார கட்டண செலவும் படிப்படியாக குறைந்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: முதல் கட்டமாக 6 மெகா வாட் அளவுக்கு சூரியஒளி மின் உற்பத்தி சாதனத்தை நிறுவ முடிவு செய்தோம். இதுவரையில் 5.2 மெகா வாட் அளவுக்கு சோலாா் கருவிகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறோம். இதன்மூலம், மின்சாரத்தை உற்பத்தி செய்வதோடு, மின்சார கட்டண செலவு படிப்டியாக குறைந்துள்ளது. மேலும், வரும் ஆண்டுகளில் வாய்ப்புள்ள இடங்களில் கூடுதலாக சூரியஒளி மின்சாதன கருவிகளை நிறுவி, மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com