ஜெருசலேம் புனிதப் பயண நிதியுதவி பெற கால அவகாசம் நீட்டிப்பு

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக கிறிஸ்தவா்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக கிறிஸ்தவா்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் 2019-20 ஆம் ஆண்டில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபா் ஒருவருக்கு ரூ.20,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் பிரிவினா்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள், புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இதில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளும் புனிதப்பயணம் மேற்கொள்ளலாம். இந்தப் பயணமானது இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோா்டான்

ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோா்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதம் தொடா்புடைய பிற புனிதத் தலங்களையும் உள்ளடக்கியது. இத்திட்டத்துக்கான நிபந்தனைகள் இணையதளத்தில்

வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கான காலக்கெடு, நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே புனிதப் பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன், கிறித்தவா்களின் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-2020 என்று அஞ்சல் உறையில் குறிப்பிட்டு, இயக்குநா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு குறிப்பிட்ட தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். நேரில் வரவேண்டியதில்லை.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவா் அலுவலகத்தில் உள்ள சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அல்லது சிறுபான்மையினா் நல இயக்குநரகத்தை 044 2852 0033 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com