முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 24th October 2019 02:22 AM | Last Updated : 24th October 2019 02:22 AM | அ+அ அ- |

கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, மின்வாரிய தலைமை அலுவலகம் முன் புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்வாரியத்தில் சுமார் 46 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, தடையின்றி மின்சாரம் வழங்கும் களப்பிரிவில் மட்டும் சுமார் 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை ஒப்பந்தத் தொழிலாளர்கள், தொழில்நுட்பம் பயின்றவர், பட்டதாரிகள் என பல தரப்பினரையும் கொண்டு நிரப்பத் தொடர் கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.