முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
தங்கம் பவுனுக்கு ரூ.32 குறைவு
By DIN | Published On : 24th October 2019 05:43 PM | Last Updated : 24th October 2019 05:43 PM | அ+அ அ- |

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.29,304-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 5-ஆம் தேதி காலையில், வரலாறு காணாத வகையில், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலையில் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.29,304-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.4
குறைந்து, ரூ.3,663-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.49 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.49,000 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 3,663
1 பவுன் தங்கம் ..................... 29,304
1 கிராம் வெள்ளி .................. 49.00
1 கிலோ வெள்ளி .................. 49,000
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் .................... 3,667
1 பவுன் தங்கம் ..................... 29,336
1 கிராம் வெள்ளி .................. 49.10
1 கிலோ வெள்ளி ................. 49,100