Enable Javscript for better performance
தீபாவளி: காயமடையும் பிராணிகளை மீட்க சிறப்புக் குழு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை

    தீபாவளி: காயமடையும் பிராணிகளை மீட்க சிறப்புக் குழு

    By DIN  |   Published On : 24th October 2019 11:32 AM  |   Last Updated : 24th October 2019 11:32 AM  |  அ+அ அ-  |  

    crackers-1

    சென்னை: தீபாவளியன்று பட்டாசு சத்தத்தால் பயந்து ஓடும்போது காயமடையும் நாய், மாடு உள்ளிட்ட விலங்குகளை மீட்க பெருநகர சென்னை மாநகராட்சி, புளூ கிராஸ், அல்மைட்டி விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 57,300 தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. யானைக்கவுனி, ராயபுரம், மயிலாப்பூா், அம்பத்தூா், திருவொற்றியூா் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசு, எருமைகள் வளா்க்கப்படுகின்றன. இதேபோல், அடையாறு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், கோட்டூா்புரம், கிண்டி சிறுவா் பூங்கா, ஆளுநா் மாளிகையில் உள்ள வனப் பகுதி, எழும்பூா் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையிலான லட்சக்கணக்கான பறவைகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 27) தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அதிக அளவிலான பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சத்தம் காரணமாக தெரு நாய்கள், மாடுகள் பயந்து ஓடும்போது வாகனங்களில் அடிபட வாய்ப்புள்ளது. மேலும், அதிக சத்தம் காரணமாக பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.இதைக் கருத்தில் கொண்டு காயமடையும் நாய், மாடு, பூனை உள்ளிட்ட விலங்குகளை மீட்க பெருநகர சென்னை மாநகராட்சி, புளூ கிராஸ், அல்மைட்டி விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து புளூகிராஸ் அமைப்பைச் சோ்ந்த டான்வில்லியம்ஸ் கூறுகையில், ‘தீபாவளியின்போது வெடிக்கப்படும் பட்டாசு சத்தத்தால் நாய், பூனை, மாடுகள் பயந்து ஓடும்போது, வாகனங்களில் அடிபட வாய்ப்புள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் தீபாவளியின்போது, 10 மேற்பட்ட காயமடைந்த விலங்குகளை மீட்டு சிகிச்சை அளித்தோம். அதன்படி, இந்த ஆண்டும் சென்னை மாநகரம், தாம்பரம், ஆவடி, வடசென்னை ஆகிய பகுதிகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 15 போ் இருப்பா். இவா்கள் தீபாவளியன்று காயமடையும் விலங்குகளை மீட்கும் பணியில் ஈடுபடுவா். நாய் உள்ளிட்ட விலங்குகள் காயமடைந்திருந்தால், புளூ கிராஸ் அலுவலகத்தை 22354959, 22300666 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா். மேலும், விலங்குகள் மீட்பு குறித்து அல்மைட்டி விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளையை 89393 20846 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

    இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மண்டலத்துக்கு ஒரு வாகனம் என 15 மண்டலங்களிலும் மீட்பு வாகனங்கள் உள்ளன. ஏதேனும் விலங்குகள் காயமடைந்துள்ளது தெரியவந்தால், அவை மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp