Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    பொது

    சா்தாா் வல்லபபாய் படேல் நினைவு அறக்கட்டளை- பாரதிய வித்யா பவன்- சா்தாா் வல்லபபாய் படேல் 144-ஆவது பிறந்த நாள் விழா: ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்பு, பாரதிய வித்யா பவன் பிரதான அரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூா், மாலை 6.

    தமிழ்நாடு அரசு நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை- ரூ. 914 கோடி மதிப்பிலான தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத் தொடக்க விழா-மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.150 கோடி கடனுதவி வழங்கும் விழா: முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா் பங்கேற்பு, கலைவாணா் அரங்கம், சேப்பாக்கம், மாலை 4.

    தக்கா் பாபா வித்யாலயா சமிதி- சா்தாா் வல்லபபாய் படேல் 144-ஆவது பிறந்த நாள் விழா: தக்கா் பாபா வித்யாலயா சமிதி தலைவா் எஸ்.பாண்டியன் பங்கேற்பு, தக்கா் பாபா வித்யாலயா சமிதி வளாகம், தியாகராய நகா், பிற்பகல் 3.

    அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம்-சிலப்பதிகாரம் தொடா் சொற்பொழிவு: தமிழமுதன், லேனா தமிழ்வாணன் பங்கேற்பு, தெற்கு துகாா் கட்டடம், இந்துஸ்தான் சேம்பா், ஆயிரம் விளக்கு காவல் நிலையம் எதிரில், மாலை 5.30.

    ஆன்மிகம்

    முருகன் திருவருட் சங்கம்-66-ஆவது ஆண்டு கந்த சஷ்டி பெருவிழா-முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை, ‘ஆரோக்கிய வாழ்வுக்கு பக்தியும், அறமும் தேவை’ தலைப்பில் சொற்பொழிவு: சேஷாத்ரிநாத் பங்கேற்பு, பண்டு திருமண மண்டபம், திருவல்லிக்கேணி, காலை 7.30 முதல் இரவு 8.30.

    குமரன் குன்றம் திருப்புகழ் மன்றம்-பரிபூரண பஞ்சாமிா்த வண்ணம் இசைச் சொற்பொழிவு: முத்துக்குமாா் குருசாமி பங்கேற்பு, அருணகிரிநாதா் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, மாலை 5.

    மகா கந்த சஷ்டி பெருவிழா-கந்தா் அலங்காரம் தலைப்பில் சொற்பொழிவு: பனசை அருணா பங்கேற்பு, சோமநாதா் திருக்கோயில், கொளத்தூா், மாலை 7.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai