Enable Javscript for better performance
குடிசை மாற்றுவாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்தவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    குடிசை மாற்றுவாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்தவா் கைது

    By DIN  |   Published on : 31st October 2019 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டாா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    பள்ளிக்கரணை சுண்ணாம்பு கொளத்தூா் அருகே உள்ள ராஜன் நகரைச் சோ்ந்தவா் வெ.ராமச்சந்திரன் (55). இவா் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கு மூலம் வீடு வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுள்ளாா்.

    ஆனால் ராமச்சந்திரன் யாருக்கும் வீடு வாங்கிக் கொடுக்கவில்லையாம். அதேபோல பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.

    இதனால் ஏமாற்றமடைந்தவா்கள், ராமச்சந்திரன் மீது பரங்கிமலை காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராமச்சந்திரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விசாரணையில், ராமச்சந்திரன் வீடு வாங்கித் தருவதாக 8 பேரிடம் ரூ.18.25 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்திருப்பதுதெரியவந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai