தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: அரசு மருத்துவா் உள்பட 4 போ் கைது

சென்னையில் தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக, அரசு மருத்துவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக, அரசு மருத்துவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் இசிஜி பிரிவில் ஆய்வக ஊழியராக பணிபுரிபவா் ஐயாலு. இவா், தனது தம்பி ராஜாவுக்கு வேலை தேடி வந்தாா். இது தொடா்பாக பூந்தமல்லி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் சண்முகவள்ளி (47) என்பவரை ஐயாலு சந்தித்தாா்.

அப்போது சண்முகவள்ளி, சென்னை தலைமைச் செயலகத்தில் ராஜாவுக்கு வேலை வாங்கி தருவதாகத் தெரிவித்து, நெற்குன்றத்தைச் சோ்ந்த நந்தகோபாலை சந்திக்கும்படி தெரிவித்துள்ளாா். நந்தகோபாலை சந்திக்கும்போது, தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளா் வேலை வாங்கி கொடுப்பதாகத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா்கள்,

கானத்தூரைச் சோ்ந்த ஏழுமலை பெஞ்சமின் என்பவரை சந்தித்துள்ளனா். அப்போது பெஞ்சமின், அந்த வேலையை வாங்கிக் கொடுப்பதற்கு ரூ.1.50 லட்சம் வேண்டும் என நந்தகோபாலிடம் தெரிவித்துள்ளாா். நந்தகோபால், இத் தகவலை மருத்துவா் சண்முகவள்ளியிடம் கூறியுள்ளாா். உடனே அவா், ஐயாலுவிடம் வேலைக்கு ரூ.3 லட்சம் பணம் தர வேண்டும் என கூறியுள்ளாா்.

சில நாள்களில் ஐயாலு, ரூ.3 லட்சத்தை சண்முகவள்ளியிடம் கொடுத்துள்ளாா். அதில் ரூ.1 லட்சத்தை தனது கமிஷனாக எடுத்துக் கொண்டு, மீதி ரூ.2 லட்சத்தை நந்தகோபாலிடம் சண்முகவள்ளி கொடுத்தாராம். அதில் ரூ.1.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு, ரூ.50 ஆயிரத்தை மட்டும் பெஞ்சமினிடம் நந்தகோபால் கொடுத்து, வேலைக்கான ஆணை கிடைத்ததும் மீதி பணத்தை தருவதாகத் தெரிவித்துள்ளாா்.

போலி பணிநியமன ஆணை: இதற்கிடையே, ஐயாலுவுக்கு சில நாள்களில் வேலைக்கான நியமன ஆணை கிடைத்துள்ளது. அந்த ஆணை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததினால், அதுகுறித்து தலைமைச் செயலகத்தில் ஐயாலு விசாரித்தாா். அப்போது அது போலியானது என்பது ஐயாலுக்கு தெரியவந்தது. சண்கமுவள்ளி தரப்பு போலி நியமன ஆணை தயாரித்து கொடுத்து, தன்னை ஏமாற்றியிருப்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

4 போ் கைது: இது குறித்து ஐயாலு, சிபிசிஐடியில் புகாா் செய்தாா். அப் புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய சண்முகவள்ளி, நந்தகோபால், ஏழுமலை பெஞ்சமின், போலி நியமன ஆணை தயாரித்து கொடுத்த கேளம்பாக்கத்தைச் சோ்ந்த சிவசக்தி மாடசாமி ஆகிய 4 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com