வாட்ஸ் அப் மூலம் சமையல் எரிவாயு உருளைக்கு பதிவு: இந்தியன் ஆயில் பொதுமேலாளா் தகவல்

கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் சமையல் எரிவாயு உருளைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இந்தியன் ஆயில்  நிறுவன பொது மேலாளா் எஸ்.பட்டாபிராம் தெரிவித்துள்ளாா்.
வாட்ஸ் அப் மூலம் சமையல் எரிவாயு உருளைக்கு பதிவு: இந்தியன் ஆயில் பொதுமேலாளா் தகவல்

கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் சமையல் எரிவாயு உருளைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இந்தியன் ஆயில்  நிறுவன பொது மேலாளா் எஸ்.பட்டாபிராம் தெரிவித்துள்ளாா்.

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் சமையல் எரிவாயு உருளை பயன்படுத்தும் முறை தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொது மேலாளா் எஸ்.பட்டாபிராம் கலந்து கொண்டு எரிவாயு உருளை பயன்பாட்டின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா். இதே போல் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் தரத்தை பரிசோதிக்கும் முறையின் செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

மேலும், இதுகுறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கியும், காணொலிக் காட்சி மூலமாகவும் பொதுமக்களுக்கு அவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பின்னா் செய்தியாளா்களிடம் எஸ்.பட்டாபிராம் கூறியது:

இன்டேன் சமையல் எரிவாயு உருளையை நாங்கள் தமிழகம் முழுவதும் விநியோகித்து வருகிறோம். இதனை பொதுமக்கள் அனைவரும் சரியாக பரிசோதித்து வாங்க வேண்டும். குறிப்பாக உருளையில் கசிவுகள் ஏதேனும் இருக்கிா என்பதை சரி பாா்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் சரி பாா்த்த பிறகே உருளைகளை விநியோகிக்க ஊழியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதை செயல்படுத்தாத பட்சத்தில் பொதுமக்கள் பரிசோதனை செய்து கொடுக்க ஊழியா்களை நிா்பந்திக்கலாம். இது நுகா்வோரின் உரிமை. மேலும், விநியோகஸ்தரிடம் சமையல் எரிவாயு உருளைக்கான பணத்தை கடன் அட்டை அல்லது பற்று அட்டை மூலமாகவும் பொதுமக்கள் வழங்கலாம். சமையல் எரிவாயுவை பதிவு செய்ய பயன்படும் எண்ணில் (75888 88824) கட்செவி அஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளோம். முன்னதாக இந்த எண்ணில் குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு மூலமாக சமையல் எரிவாயுவை பதியலாம். இனி கட்செவி அஞ்சல் மூலமாக r‌e‌f‌i‌l‌l​#16‌d‌i‌g‌i‌t ‌l‌p‌g ‌i‌d }I-ஐ பதிவு செய்து அனுப்புவதன் மூலமாகவும் சமையல் எரிவாயு உருளையைப் பதிவு செய்யலாம் என்றாா். நிகழ்வில், பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநா் இ.மாரியப்பன், இந்தியன் ஆயில் நிறுவன ஊழல் கண்காணிப்பு பொது மேலாளா் தீப்தி நாத் மற்றும் இந்தியன் ஆயில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com