விபத்தில் உருக்குலைந்த கல்லூரி மாணவியின் கையை நவீன சிகிச்சை மூலம் காப்பாற்றிய மருத்துவர்கள்

சாலை விபத்தில் வலது கை நசுங்கி அகற்றும் நிலையில் இருந்த கல்லூரி மாணவிக்கு நவீன சிகிச்சை மூலம் கையைக் காப்பாற்றி மறுவாழ்வு அளித்துள்ளனர் மருத்துவர்கள்.
விபத்தில் உருக்குலைந்த கல்லூரி மாணவியின் கையை நவீன சிகிச்சை மூலம் காப்பாற்றிய மருத்துவர்கள்

சாலை விபத்தில் வலது கை நசுங்கி அகற்றும் நிலையில் இருந்த கல்லூரி மாணவிக்கு நவீன சிகிச்சை மூலம் கையைக் காப்பாற்றி மறுவாழ்வு அளித்துள்ளனர் மருத்துவர்கள்.
 தாம்பரத்தை அடுத்த வாலாஜாபாத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரஸ்வதியின் மகள் பொன்னியம்மாள்(20). இவர் கல்லூரிக்குச் செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி வலது கை முறிந்து நசுங்கிய நிலையில் குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.
 தலைமை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர் தர்மராஜன் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில் பொன்னியம்மாளின் வலது கையின் பிரதான ஹியூமரெஸ் எலும்பு முறிந்து, கையின் மேல்பகுதி சதை முழுக்க நைந்து உருக்குலைந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் தர்மராஜன், மிதுன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் அருள் சிவகுமார் ஆகியோர் கொண்ட மருத்துவர் குழுவினர் விடாமுயற்சியுடன் 4 முறை மேற்கொண்ட நவீன அறுவை சிகிச்சைகள் மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் பொன்னியம்மாளின் வலது கை தற்போது நன்கு குணமடைந்துள்ளது.
 இது குறித்து மருத்துவர் தர்மராஜன் கூறியது:
 விபத்தில் சிக்கி மேற்கை முழுவதும் நசுங்கி சதை உருக்குலைந்து மிக மோசமான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஏழைத் தொழிலாளி மகள் பொன்னியம்மாளின் வலது கை 80 சதவீதம் சேதமடைந்திருந்தது. எலும்புகள், நரம்புகள், ரத்தக் குழாய்களை சீரமைத்து கையைக் குணமாக்குவதில் பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிட்டது என்றார்.
 பொன்னியம்மாள் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கையை அகற்றி விடுவார்களோ என்ற பயத்தில் இருந்தேன். சிறப்பான சிகிச்சை மூலம் மருத்துவர்கள் கையைக் காப்பாற்றி எனக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com