சென்னையில் 339 இடங்களில் உறை கிணறுகள் அமைப்பு: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் 339 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 339 இடங்களில் உறை கிணறுகள் அமைப்பு: மாநகராட்சி நடவடிக்கை


சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் 339 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 200 வார்டுகளில் வார்டுக்கு 1,000 வீதம் 200 வார்டுக்கு 2 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு வார்டுக்கும்  மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தெருவாரியாக கட்டடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தக் குழுக்கள் 200 வார்டுகளில் இதுநாள் வரை 2, 72, 061 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளனவா என ஆய்வு  மேற்கொண்டுள்ளது. அதில் 1, 62, 284 கட்டடங்களில்  மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளதும், 38,507 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 69,490 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லாத கட்டட உரிமையாளர்களுக்கு அதற்கான கட்டமைப்புகளை உடனடியாக அமைக்க ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பயனற்ற நிலையில் உள்ள 238 சமுதாயக் கிணறுகள் கண்டறியப்பட்டு, அவற்றில் 47 கிணறுகள் புனரமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் 339 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணி மேலும் விரைவுபடுத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com