சுடச்சுட

  


  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நவக்கிரக திருத்தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
  இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள நவக்கிரக திருத்தலங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இச்சுற்றுலா, நவராத்திரி 9 நாள்கள் மற்றும் சிறப்பு விஷேச நாள்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு (திருவல்லிக்கேணி, டி1 காவல் நிலையம் அருகில்) மீண்டும் இரவு 7 மணிக்கு வந்தடையும். இந்த ஆன்மிக சுற்றுலாவில் சோமநாதீஸ்வரர் கோயில் (சோமங்களம்), நாகேஸ்வரர் திருக்கோயில் (குன்றத்தூர்), அகத்தீஸ்வரர்  கோயில் (பொழிச்சலூர்), சுயதரேஸ்வரர் கோயில், (கோவூர்) நீலகண்டேஸ்வரர் கோயில் (கெருகம்பாக்கம்), அகத்தீஸ்வரர் கோயில் (கொளப்பாக்கம்), வெள்ளீஸ்வரர் கோயில் (மாங்காடு) வைத்தீஸ்வரர் கோயில் (பூந்தமல்லி) ராமநாதீஸ்வரர்  கோயில் (போரூர்) அழைத்து செல்லப்படுவர். இதற்கான கட்டணமாக ரூ.800 வசூலிக்கப்படுகிறது. இச்சுற்றுலாவுக்கு குளிர் சாதனப் பேருந்து இயக்கப்படும்.  
  விவரங்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், எண்.2, வாலாஜா சாலை, சென்னை -2 என்னும் முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரிலோ, 044-25333333, 25333444, 25333857, 25333850-54,  180042531111(கட்டணமில்லா தொலைபேசி எண்) என்னும் தொலைபேசி எண்களையோ தொடர்பு கொள்ளலாம். மேலும் www.ttdconline.com, www.mttdonline.com ஆகிய இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai