சங்கடஹர சதுர்த்தி: சென்னையிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு சுற்றுலா அறிமுகம்

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை முதல் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் வரையிலான சிறப்பு சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 
சங்கடஹர சதுர்த்தி: சென்னையிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு சுற்றுலா அறிமுகம்


சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை முதல் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் வரையிலான சிறப்பு சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகிலுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு (திருவல்லிக்கேணி, டி1 காவல் நிலையம் அருகில்) பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். மேலும்,  தாம்பரத்திலிருந்தும் அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு 10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை திருச்சியில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்படும். அதன்பின், காலை 10.30 மணிக்கு பிள்ளையார்பட்டி  கோயிலுக்கு அவர்கள் அழைத்து செல்லப்படுவர். 

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பக்தர்கள் கோயில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின், மதியம் 1.30 மணிக்கு திருச்சி அழைத்து வரப்படுவார்கள். தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அனைவருக்கும்  சமயபுரத்தில் இரவு உணவு  வழங்கப்படும். அன்றிரவு சமயபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு சென்னை வந்தடைவார்கள். இச்சுற்றுலாவுக்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 2,600 மற்றும் சிறியவர்களுக்கு (6-12 வயது) ரூ.1,300 வசூலிக்கப்படுகிறது. இந்த பயணத்துக்கு குளிர் சாதனப் பேருந்து இயக்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், எண்.2, வாலாஜா சாலை, சென்னை -2 என்னும் முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரிலோ, 044 25333333, 25333444, 25333857, 25333850-54, 180042531111(கட்டணமில்லா தொலைபேசி எண்) என்னும் தொலைபேசி எண்களையோ தொடர்பு கொள்ளலாம்.

மேலும் www.ttdconline.com, www.mttdonline.com ஆகிய இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com