சைபர் குற்றங்களில் துப்புத் துலக்க நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம் மூலம் சைபர் குற்ற வழக்குகளில் சிறப்பாக துப்புத் துலக்க வேண்டும் என தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி தெரிவித்தார்.
சைபர் குற்றங்களில் துப்புத் துலக்க நவீன தொழில்நுட்பம்


நவீன தொழில்நுட்பம் மூலம் சைபர் குற்ற வழக்குகளில் சிறப்பாக துப்புத் துலக்க வேண்டும் என தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது தொடர்பான சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. 
இதைக் கருத்தில் கொண்டு தமிழக காவல்துறையில் அண்மையில் சைபர் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டது. இந்த குற்றப்பிரிவுக்கு உதவி காவல் ஆய்வாளர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட உதவி காவல் ஆய்வாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி டிஜிபி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி பேசியது: 
தமிழக காவல்துறை தொழிநுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் கூட கைரேகை, தடயங்கள் மூலம் வழக்குகளில் துப்புத் துலக்கி சிறப்பாக செயல்பட்டது. 
இப்போது தகவல் தொழிநுட்பம் வேகமாக வளர்ந்துவிட்டது. இக் காலக்கட்டத்தில், தகவல் தொழில்நுட்பம் மூலம் வழக்குகளில் சிறப்பாக துப்புத் துலக்கி முத்திரை பதிக்க வேண்டும் என்றார். 
இந்நிகழ்ச்சிக்கு சைபர் குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கட்ராமன் தலைமை வகித்தார். 
சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த்முரளி, நிர்வாகப்பிரிவு ஏடிஜிபி கந்தசாமி, தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில், சைபர் குற்றப்பிரிவைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் விக்கிரமன்,ஷசாங் சாய், சண்முகப்பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com