அண்ணா சாலையில் மீண்டும் இருவழிப் போக்குவரத்து: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

அண்ணா சாலையில் சோதனை ஓட்டமாக 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் புதன்கிழமை இரு வழிப் போக்குவரத்து நடைபெற  அனுமதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் புதன்கிழமை தொடங்கிய இருவழிப் போக்குவரத்து பாதையாக மாற்றுவதற்கான சோதனை ஓட்டம்.
சென்னை அண்ணா சாலையில் புதன்கிழமை தொடங்கிய இருவழிப் போக்குவரத்து பாதையாக மாற்றுவதற்கான சோதனை ஓட்டம்.


அண்ணா சாலையில் சோதனை ஓட்டமாக 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் புதன்கிழமை இரு வழிப் போக்குவரத்து நடைபெற  அனுமதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மெட்ரோ ரயில் பணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு அண்ணா சாலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.  சில இடங்கள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டன. 
இதற்காக அண்ணா சாலையில்  எல்.ஐ.சி.யில் இருந்து ஸ்பென்சர் வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.  இந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் ஜெனரஸ் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ ஆகிய சாலைகள் வழியாக அண்ணா சாலையை சென்றடைந்தன. அண்ணா மேம்பாலத்தில் இருந்து சிம்சன் வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. 
இதேபோல, நந்தனம், தேனாம்பேட்டை பகுதியிலும் அண்ணா சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. 
இதற்காக அந்தப் பகுதியை சுற்றியுள்ள சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன.  
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் மெட்ரோ ரயில் பணி முழுமையடைந்து, அதன் சேவை அண்மையில் தொடங்கியது.   இதையடுத்து, அண்ணா சாலையில் இரு வழிப்போக்குவரத்து சோதனை ஓட்டத்தை போக்குவரத்து பிரிவு இணை ஆணையர் எழிலரசன் புதன்கிழமை தொடக்கி வைத்தார். இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அண்ணா சாலையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த பெரும் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.
மக்களிடம் கருத்து கேட்கப்படும்: இது குறித்து, இணை ஆணையர் எழிலரசன் கூறியது: 
அண்ணா சாலையில் இரு வழிப்போக்குவரத்து சோதனை ஓட்டம் இரண்டு நாள்கள் நடைபெறும். பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகள் கேட்கப்படும். அதனடிப்படையில் அண்ணா சாலையில் இரு வழிப் போக்குவரத்தை அனுமதிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com