சுடச்சுட

  

  குடும்ப அட்டையில் திருத்தங்கள்: சென்னையில் நாளை குறைதீர் முகாம்

  By DIN  |   Published on : 13th September 2019 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரேஷன் அட்டையில் திருத்தங்களைச் செய்வதற்கான குறைதீர் கூட்ட முகாம்கள் சென்னையில் வரும் சனிக்கிழமை (செப். 14) நடைபெறவுள்ளது. இதுகுறித்து, தமிழக உணவுத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
  குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நிகழ் மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
  சென்னையில் உள்ள 17 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெறுகிறது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் செல்லிடப்பேசி எண் பதிவு செய்தல் போன்ற மாற்றங்களை குறைதீர் முகாம்களின் போது தெரிவிக்கலாம். மேலும், உணவுப் பொருள் வழங்கல் துறையுடன் நுகர்வோர் பாதுகாப்பும் இணைவதால், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவையில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தாலும் தெரிவிக்கலாம் என்று தமிழக உணவுத் துறை கூறியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai