சுடச்சுட

  

  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

  By DIN  |   Published on : 13th September 2019 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  சென்னை, நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முதியவர் மணிமுத்து. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அசோக்நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் மணிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கை அண்மையில் விசாரித்த நீதிபதி மஞ்சுளா, குற்றம்சாட்டப்பட்ட மணிமுத்துவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai