சுடச்சுட

  


  கனரா வங்கி நிறுவனர் சுப்பாராவ்பையின் 114-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய அளவிலான பொது அறிவு வினாடி- வினா நிகழ்ச்சி(canara knowledge champ 2019), , சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. 
  வெற்றி பெறும் முதல் மூன்று அணிகளுக்கு ரூ. 50,000, ரூ.30,000, ரூ.20,000 பரிசாக வழங்கப்படும். முதலிடம் பெறும் அணி தேசிய அளவிலான அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 
  ஒவ்வொரு பள்ளியும் இரண்டு அணிகள் வரை அனுப்பலாம். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளி மூலம் அருகில் உள்ள கனரா வங்கிக் கிளைகளில் பதிவு செய்யலாம். 
  மேலும் விவரங்களுக்கு mipdro1chn@canarabank.com,mipdro2chn@canarabank.com, mipdrokpm@canarabank.com  என்ற மின்னஞ்சல் முகவரிகளிலும் 044 2433 4501, 24333701, 27234176 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai