காமராஜர் சாலை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை பராமரிப்புப் பணி: போக்குவரத்து மாற்றம்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை பாலத்தின் இரும்பு உத்திரம் மாற்றி அமைக்கப்படுவதால் அச்சாலையில் சனிக்கிழமை  (செப். 14) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. 


சென்னை காமராஜர் சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை பாலத்தின் இரும்பு உத்திரம் மாற்றி அமைக்கப்படுவதால் அச்சாலையில் சனிக்கிழமை  (செப். 14) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. 
இதுகுறித்து பெருநகர சென்னை போக்குவரத்துக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தெற்கு ரயில்வே  சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை பாலத்தின் இரும்பு உத்திரம் மாற்றியமைக்கும் பணி இரு பகுதிகளாக நடைபெற உள்ளது.  
இதனால், அச்சாலை சனிக்கிழமையில் இருந்து  ஒருவழிப் பாதையாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதன்படி, காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் போர் நினைவுச் சின்னம், தலைமைச் செயலகம் வழியாக அதே சாலையில் வழக்கம்போல் செல்லலாம்.
ராயபுரம் பாலம், ராஜாஜி சாலையில் இருந்து காமராஜர் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும், ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாகச் செல்லத் தடை செய்யப்படுகிறது. மாற்றுப் பாதையாக ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை அணுகு சாலை வழியாக வடக்கு பக்க கோட்டை சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி சாலை (முத்துசாமி சிக்னல்) - முத்துசாமி பாலம் வாலாஜா சிக்னல்,  கொடிமரச் சாலை வழியாக  போர் நினைவுச் சின்னம் சென்று காமராஜர் சாலையை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com