ஜெருசலேம் புனித பயணத்துக்கு நிதியுதவி பெற காலக்கெடு நீட்டிப்பு

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20 -ஆம் ஆண்டின் ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்புனித பயணம் இஸ்ரúல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவமத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. பயணக்காலம் 10 நாள்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்பப்படிவத்தை (இலவசமாக) மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்திலோ அல்லது www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். இத்திட்டத்துக்கான நிபந்தனைகள் அதே  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புனித பயண நிதியுதவி பெறுவதற்கான காலக்கெடு செப்.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன், கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20 என்று குறிப்பிட்டு, ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு, செப்.30 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க  வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது சிறுபான்மையினர் நல இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது  044-28520033 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com